2024 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர்களை அனுமதிக்கும் சுற்றறிக்கையை கல்வி அமைச்சு நாளை (13) வெளியிடவுள்ளது.
இச்சுற்றறிக்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று அனுமதி தொடர்பான விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு தரம் ஒன்று அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது பெற்றோர்கள் சுற்றறிக்கையின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இது மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும்.