தேசிய சாதனை படைத்த இலங்கை வீராங்கனை வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை செய்யும் பரிதாபம்!

Date:

கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் தேசிய சாதனை படைத்த சச்சினி கௌசல்யா பெரேரா மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு வேலை செய்து வருகின்றார்.

இவர் 9 தடவைகள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய சாதனையை நிலைநாட்டி இருந்தார். பாதுக்க பிரதேசத்தில் வசிக்கும் இவர், சிறுவயது முதலே விளையாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, 2018 முதல் 2022 வரை தேசிய சாம்பியனானார்.

இந்த திறமைகளை வெளிப்படுத்திய பின்பும், பொருளாதார நெருக்கடி காரணமாக சச்சினி கௌசல்யா பெரேரா தன் தாய்நாட்டை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது.

சச்சினி துபாய் அரச இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகின்றார்.

தான் எதிர்கொண்டுள்ள இந்த நிலை மற்றுமொரு விளையாட்டு வீரருக்கு ஏற்படக் கூடாது எனவும், அது விளையாட்டு அதிகாரிகளின் பொறுப்பு எனவும் சச்சினி சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...