பாகிஸ்தான் அரச அனுசரணையில் பௌத்த பாரம்பரியங்கள் தொடர்பான காந்தாரா கருத்தரங்கு இன்று தொடங்குகின்றது!

Date:

செழுமையான பௌத்த பாரம்பரியம் மற்றும் மரபுகளைக் கொண்டாடும் வகையில் மூன்று நாள் காந்தார கருத்தரங்கு இன்று  (ஜூலை 11) முதல் பாகிஸ்தான் இஸ்லாமபாத்தில் நடைபெற உள்ளது.

இஸ்லாமாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ், தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயக்குனரகம் கேபி மற்றும் பாகிஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (PTDC) ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

இதேவேளை இக்கருத்தரங்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள் பங்கேற்பர்.

புராதன காந்தார நாகரிகம் மற்றும் புத்த பாரம்பரியத்தை புத்துயிர் பெறுவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச “காந்தாரா சிம்போசியத்தை” பாகிஸ்தான் நடத்த உள்ளது.

பௌத்த பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த மூத்த துறவிகள் மற்றும் அறிஞர்களின் பங்கேற்புடன், இடம்பெறவுள்ள இந்த கருத்தரங்கில் கலாச்சார இராஜதந்திரத்தை வளர்ப்பது மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் இஸ்லாமோஃபோபியாவை ஒழிப்பது போன்ற விடயங்களும் கலந்துரையாடப்படவுள்ளன.

இந்த கருத்தரங்கில், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து, நேபாளம், தென் கொரியா, இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரபல அறிஞர்கள் மற்றும் பௌத்த மதத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள்

 

Popular

More like this
Related

ஹிப்ழ் மற்றும் கிதாப் மத்ரஸா மாணவர்களுக்கான 2 நாள் ஊடகப் பயிற்சி நெறி

ஹிப்ழ் மற்றும் கிதாப் மத்ரஸா மாணவர்களுக்கான 2 நாள் ஊடகப் பயிற்சி...

நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு...

இலங்கைக்கு வடக்கே குறைந்த அழுத்தம்: நாட்டின் பல பகுதிகளில் மழை

இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்த...

ஹரின் பெர்னாண்டோவுக்கு முக்கிய பதவி!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய பிரதான பதவியொன்றை உருவாக்க ஐக்கிய...