புத்தளத்தில் இடம்பெற்ற ‘கடல் சார் மனித கடத்தல் பற்றி விழிப்புணர்வு திட்டம்’ தொடர்பான செயலமர்வு!

Date:

இலங்கையில் கடல் சார் மனித கடத்தல் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் திட்டம் தொடர்பான முழு நாள் செயலமர்வொன்று புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள கிராமிய அபிவிருத்தி அமைப்பின் (ஆர்.டி.எப்) கேட்போர் கூடத்தில் இன்று (27) இடம்பெற்றது.

சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் சீ.டி.எஸ்.நிறுவனம் ஆகியன இணைந்து இந்நிகழ்வுவை ஏற்பாடு செய்திருந்தன.

இதில் பிரதான வளவாளர்களாக மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றவியல் விசாரணை பிரிவின் அதிகாரிகளான சுகத் அமரசிங்க மற்றும் எஸ்.ஐ.மதூஷான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமூக மேம்பாட்டு மையத்தின் நிர்வாக இயக்குனர் இந்திராணி குசுமலதா இந்நிகழ்வை நெறிப்படுத்தினார்.

புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...