தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஜூன் 15ம் திகதி இணையவழி மூலம் ஆரம்பமானது.
இந்நிலையில், நள்ளிரவு 12.00 மணியுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை முடிவடையவுள்ளதுடன், காலக்கெடு எந்த சந்தர்ப்பத்திலும் நீடிக்கப்படமாட்டது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2023ம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15ம் திகதி நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.