பொதுச் செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகள் அறிமுகம்: ஜனாதிபதி உறுதி

Date:

நாட்டைக் கட்டியெழுப்புவதில் நிதி ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுச் செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் புதிய வருமானத்தை ஈட்டுவதற்குமான முறையான நடவடிக்கைகளை உடனடியாக அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளுக்கான இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையிலான குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போது பொதுச் செலவுகள் பெரும்பாலும் இந்த நோக்கத்தை அடையத் தவறுவதால், அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவின் பெறுமதியையும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான பொது வருவாயை புறக்கணிப்பது மட்டுமன்றி, பொது நிதியை பயனற்ற நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடில்லாமல் செலவிடுவது குறித்தும் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாக இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படாமையே தற்போதைய நிதிப் பிரச்சினைகளுக்குக் காரணம்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் வருமான வரி விவகாரங்களை ஆராய்வதற்காக பல குழுக்கள் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் கலால் திணைக்களத்தின் வருமான இலக்குகளை அடைவதற்கான கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட பரிந்துரைகளை அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

அரசாங்க வருவாயைப் பெருக்க புதிய அணுகுமுறைகளை செயற்படுத்தவும், இந்த முயற்சிகளுக்கு ஆதரவாக டிஜிட்டல் பொருளாதார உள்கட்டமைப்பை உருவாக்கவும் பரிந்துரைக்கிறது.

இந்தப் பிரேரணைகள் தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவற்றை வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவிடம் முன்வைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராஜாங்க அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், இந்தப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதன் முழுத் திறனுக்கும் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

விரிவான ஊடகப் பிரச்சாரம் மூலம் இந்த முயற்சிகள் குறித்து முறையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...