பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!

Date:

பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எனவே நாளை அல்லது திங்கட்கிழமை பணியில் சி.டி.விக்ரமரத்னவின் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சி.டி.விக்ரமரத்ன 2020 நவம்பர் 27 ஆம் திகதி பொலிஸ் மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றார் மற்றும் 2023 மார்ச் 26 ஆம் திகதி ஓய்வு பெறவிருந்தார்.

ஜனாதிபதியினால் அவருக்கு வழங்கப்பட்ட மூன்று மாத சேவை நீடிப்பு ஜூன் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

இந் நிலையில் அவருக்கு மேலும் மூன்று மாதங்கள் சேவை நீடிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...

2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகளின் வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...