முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய முடிவெடுத்த சுகாதார அதிகாரிகள், நிபுணர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: ஹக்கீம் கோரிக்கை !

Date:

கொவிட் நோயினால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யுமாறு முன்னாள் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அப்போதைய சுகாதார  அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஹக்கீம், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம், தவறான ஆலோசனைகளை வழங்கி சுகாதார அதிகாரிகளை தவறாக வழிநடத்திய அதிகாரிகள் மற்றும் நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு எதிராக அமைச்சு நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்ய அதிகாரிகளை வற்புறுத்தி அந்த அதிகாரிகள் இஸ்லாத்தை அவமானப்படுத்தியுள்ளனர் என்றும், இது இஸ்லாத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

வேறு எந்த நாடும் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அந்த அதிகாரிகள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மதத்தை மறைமுகமாக இழிவுபடுத்தியதால், வெறுக்கத்தக்க நடத்தைக்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் என்று அவர் கூறினார்

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் அமைச்சினால் அந்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா என ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரம்புக்வெல்ல, இவ்விடயம் தொடர்பாக அமைச்சுக்கு எவரேனும் முறைப்பாடு செய்தால் விசாரணை நடத்தப்படும் என்றார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...