லாஃப்ஸ்,லிட்ரோ எரிவாயுவின் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

Date:

லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையுடன் ஒப்பிடும் போது, ​​லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் அதிகம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமை குறித்து லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்துடன் கலந்துரையாடியதாகவும், விலை திருத்தம் தொடர்பான ஒப்பந்தத்தை அடுத்த வாரத்தில் வழங்குவதாக அந்த நிறுவனம் உறுதியளித்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் லாஃப்ஸ் எரிவாயுக்கான விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை அடுத்த சில வாரங்களில் சந்தைக்கு விடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிக்கின்றார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...