விசேட வைத்தியர்களின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும்!

Date:

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 வருடங்களாக நீடிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மருத்துவத்துறையில் அதிகரித்து வரும் வெற்றிடங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க சுகாதார அமைச்சு கடந்த வாரம் பரிந்துரைத்தது, இந்தத் தகவல் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.

60 வயதுடைய ஓய்வுபெறும் வயதை சவாலுக்கு உட்படுத்தி விசேட வைத்தியர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...