விவாக, விவா­க­ரத்து சட்­டத்திருத்­தம் ஹலீம்தீன் தலைமையிலான குழுவுடன் ஆராய்ந்த பின்னரே முடிவு செய்யப்படும்!

Date:

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பான சட்ட மூலத்­துக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்டு கைய­ளித்­துள்ள அறிக்கை சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழு­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அக்­கு­ழு­வினை கலந்­து­ரை­யா­டி­யதன் பின்பே இறுதித் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­டு­மெ­னவும் நீதி­ய­மைச்சர் விஜே­ய­தாச ராஜ­பக்ஷ கொழும்பிலிருந்து வெளியாகும் வாராந்தப் பத்திரிகையொன்றுக்குத் தெரி­வித்தார்.

முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி­ சப்­ரி­யினால் குறிப்­பிட்ட சட்­டத்­தி­ருத்­தங்கள் தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டதே சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழு­வாகும்.

சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரு­ட­னான பேச்­சு­வார்த்தை ஓரிரு தினங்­களில் இடம்­பெ­று­மெ­னவும் நீதி­ய­மைச்சர் தெரி­வித்தார்.

இதே­வேளை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்டு நீதி­ய­மைச்­ச­ருக்கு கைய­ளித்த குறிப்­பிட்ட முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்­பி­லான அறிக்கை தனக்குக் கிடைத்­துள்­ள­தாக சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழுவில் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் ஹக்கீம் அபூ­பக்கர், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அர்கம் நூராமித், சட்டத்தரணிகள் சபானா குல்பேகம், எர்மிசா டேகல் மற்றும் ஷேக் முயீஸ் புஹாரி, நாமிக் நபாத் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...

2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகளின் வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒன்லைன் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ஒன்லைன் விளம்பரங்களில் ஈடுபடும்போது மக்கள் எச்சரிக்கையாக...