ஹஜ் யாத்திரைக்கு சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

Date:

புனித ஹஜ் யாத்திரைக்குச் சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக ஹஜ் யாத்திரை குழு தெரிவித்துள்ளது.

ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த ஹாஜியானி ஜீனத் சஃப்ரா செயத் அலி, மக்காவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

மேலும்  பிஸ்மில்லா ட்ரவல்ஸ் (BISMILLAH_TRAVELS) உரிமையாளர் ஷிஹாப்தீன் ஹாஜியார் விபத்தில் சிக்கி மதீனாவில் காலமானார்.

இதேவேளை ஹாஜியானி ஜீனத் ஸஃப்ரா செய்த் அலி அவர்களின் ஜனாஸா இன்று மக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...

20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற அரச அதிகாரிகள் கைது

20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற இரு அரச அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை...

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...