சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தொடர்பான சுங்கப் பிரிவின் விசாரணை அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பாவினால் இன்றைய தினம் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 30 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் சபாநாயகரிடம் யோசனையொன்றை முன்வைத்திருந்தனர்.