ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
24ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில், போட்டியின் நான்காவது நாளான இன்று பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப்பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
தருஷி கருணாரத்ன, 800 மீற்றர் போட்டித் தூரத்தை 2.00.66 நிமிடங்களில் நிறைவு செய்து புதிய ஆசிய சாதனையை தன்வசமாக்கினார்.
இதேவேளை இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.