ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தொழிற்சங்கங்கள் கொழும்பு கோட்டையின் பல வீதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முன்மொழியப்பட்டுள்ள அடிமை தொழிலாளர் சட்ட திருத்தங்களை உடன் மீளப்பெறவும், EPF மற்றும் ETFஐ கொள்ளையடிக்க வேண்டாம் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த போராட்டத்தில் அனைத்து தொழிலாளர் சங்கங்களும் இணைந்துள்ளன