ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளீதரன் வரவேற்றுள்ளார் .
ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் இந்தியாவை சென்றடைந்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை இந்திய வெளிவிவகார துணை அமைச்சர் வி.முரளீதரன் வரவேற்றுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி விக்ரமசிங்க இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (ஜூலை 20) பிற்பகல் இந்தியாவிற்கு புறப்பட்டார்.
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் உத்தியோகப்பூர்வ விஜயம் இதுவாகும்.
அவருக்கு விமானநிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.