இவ்வாண்டில் ஆரம்பம் தொடக்கம் இது வரையில் வாகன விபத்துக்களால் 1192 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, இவ்வருட ஆரம்பத்தில் இருந்து ஜூலை மாதம் 9ஆம் திகதி வரையில் பதிவான வாகன விபத்துக்களில் பொலிஸாருக்கு பதிவான வாகன விபத்துக்கள் தொடர்பில் அவதானத்தை செலுத்தும் போது, அவற்றில் பெரும்பாலானவை வாகன சாரதிகளின் கவனயீனத்தால் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த காலப்பகுதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய 1126 விபத்துக்கள் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
மிகக் குறுகிய வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துவதனாலும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காத காரணத்தினாலும் அண்மைய நாட்களில் பல விபத்துக்கள் பதிவாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனியார் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால், வருடந்தோறும் ஏற்படும் வீதி விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.