இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இன்று முதல் 35 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், பொதி செய்யப்பட்ட முட்டைகள் 40 ரூபா வீதம் விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முட்டை பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கோழிப் பண்ணைகளில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.