இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஓரளவு பலமான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தெற்காக 1200 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12:29 மணிக்கு குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 5.8 மெக்னிடியூட் என்ற அளவில் உணரப்பட்டதாகவும் இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்புகளும் இல்லை எனவும் பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இதன் தாக்கம் கொழும்பு, பத்தரமுல்ல, அக்குரஸ்ஸ, காலி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.