இலங்கை ரக்பி சங்கத்தின் தலைவரின் வர்த்தமானி விவகாரம்: இடைக்காலத் தடை உத்தரவு

Date:

விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை  பிறப்பித்துள்ளது.

இலங்கை ரக்பி சங்கத்தின் தலைவர் ரிஸ்லி இல்யாஸின் செயற்பாடுகளை இடைநிறுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரக்பி நிறுவனத்தின் தலைவரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பினை வழங்கி, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...