இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட குழுவினருடன் இலங்கை வெளிவிவகார செயலாளரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு நேற்றையதினம் (10) நாட்டை வந்தடைந்தார்.
இந்நிலையில் அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியினுள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.