இளம் ஊடகவியலாளரான இஜாஸ் ஒலுவில் – 04 ஆம் பிரிவில் வசித்து வந்தவர். இவருக்கு மூன்றரை மாதம் நிரம்பிய (3 1/2) முகம்மத் சயான் இல்மு என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றது.
இம்போர்ட் மிரர் இணைய வானொலியில் அறிவிப்பாளராகவும் கடமை புரிந்தார்.இவரது மனைவி மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம் மாணவியாக இருக்கின்றார்.
பஸ்ஸில் வந்தார்.
தான் பஸ்ஸில் ஊர் நோக்கி வருவதாகவும் கொழும்பில் பார்த்த வீட்டில் தங்குவதற்கு தேவையான பொருட்களை பெட்டியில் வைத்து அடிக்கி தயார் பண்ணுமாறும், வந்தவுடன் மீண்டும் கொழும்புக்கு (திங்கட்கிழமை 10) செல்ல வேண்டும் எனவும் மனைவியுடன் கூறினார்.
இதற்கு அமைவாக மனைவி கொழும்பு சென்று தங்குவதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தயார் நிலையில் இருந்த போதே மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.