உக்ரைன் பாடசாலையின் மீது தாக்குதல் – போர்க்குற்றம் புரிந்த ரஷ்யா!

Date:

தெற்கு உக்ரைனின் சபோரிஜியா மாகாணத்தில் உள்ள பாடசாலையில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.

அப்போது அந்த பாடசாலையின் மீது ரஷ்யா திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது.

இதில் 3 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பல இடங்களில் நடந்த தாக்குதலில் 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. பாடசாலையின் மீது நடந்த இந்த டிரோன் தாக்குதல் குறித்து அந்த மாகாண கவர்னர் யூரி மலாஷ்கோ ரஷ்யா மீண்டும் போர்க்குற்றம் புரிந்ததாக கூறினார்.

இதற்கு முன்னரும் ரஷ்யா ஏற்கனவே பலமுறை இதுபோன்ற போர்க்குற்றங்களை செய்ததாக உக்ரைன் குற்றச்சாட்டியது.

அதன்பேரில் கடந்த மார்ச் மாதம் ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோல் உக்ரைன், எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளிலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Popular

More like this
Related

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை...

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...