ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவிற்கு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு!

Date:

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று(04) அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 29 ஆம் திகதி சமூக மற்றும் கலாசாரத்திற்கான மாநாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, இன்று(04) காலை 10.30க்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஊடக அடக்குமுறையின் மற்றுமொரு நடவடிக்கையாக தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் அழைக்கப்படுவது இது மூன்றாவது தடவை என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...