ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

Date:

இந்த சட்டமூலம் தொடர்பில் 196 திருத்தங்கள் ஆளும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

சட்டமூலம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்றும் இன்றுமென இரண்டு நாட்கள் நடைபெற்றது. சட்டமூலம் மூன்றாம் வாசிப்பின் பின்னரே வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தின் இருபத்தெட்டு பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் அண்மையில் சபாநாயகரிடம் தெரிவித்தது. அதன்படி, அரசியலமைப்புக்கு எதிரான சரத்துகள் திருத்தப்பட்டுள்ளன.

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரகாரம் ஜனாதிபதி, உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், ஆளுநர்கள், மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்களும் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், ஊழல் மோசடிகள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களின் உரிமைகள் புதிய சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...