ஐக்கிய மக்கள் முன்னணியின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் நிஸாம் காலமானார்!

Date:

ஐக்கிய மக்கள் முன்னணியின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் எம்.ஐ.மொஹமட் நிஸாம் (நழிமி) (48) இன்று மாரடைப்பால் காலமானார்.

கடுகண்ணாவையைச் சேர்ந்தவரும் அவிசாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் வளர்ந்து வரும் அரசியல் தலைவராவார்.

முஸ்லிம் அரசியல் மற்றும் தேசிய அரசியல் தொடர்பில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

இவர் அண்மையில் பாட்டளி சம்பிக ரணவக்க தலைமையில் உருவான ஐக்கிய மக்கள் முன்னணியின் உப தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு ஒரு தேசிய கட்சியில் அதி உயர் பதவியைப் பெற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர்.

அவரது ஜனாஸா தற்போது அவிசாவளை வைத்தியசாலையில் உள்ளது.

வித்தியாசமாக சிந்தனை போக்கு கொண்ட ஒருவரான மர்ஹும் நிஸாம் அவர்களை  அல்லாஹ் அன்னாரது பணிகளை ஏற்று பாவங்களை மண்ணித்து மேலான சுவனத்தை வழங்குவானாக!

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...