பிரான்ஸில் வன்முறையாளர்களால் இலட்சக்கணக்கான அறிய புத்தகங்களைக் கொண்ட மார்செய்லி நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நூலகத்தில் சுமார் 90 இலட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆறாவது நாளாகவும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சுமார் 2000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வன்முறையாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் வன்முறையில் ஈடுபட்ட 1,311க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவற்றில் 30 வீதமானோர் 18 வயத்துக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், 200க்கும் மேற்பட்ட அதிகமான பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோன், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ளைக்காரர்கள் கொள்ளையடிப்பதாகவும் பெற்றோர்கள் அனைவரும் தங்களின் பிள்ளைகள் யாரையும் வீதியில் இறங்கிப் போராடாமல் பார்த்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வன்முறை இடம்பெற்று வரும் இடங்களை கட்டுப்படுத்த சுமார் 45,000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசுக்கு சொந்தமான பல கட்டடங்கள் சூறையாடப்பட்டுள்ள நிலையில் 700க்கும் மேற்பட்ட கடைகள், பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் வங்கிகள் என்பன வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 234 பொதுச் சொத்துக்கள் தீயால் சேதமடைந்துள்ளதுடன் 31 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நாஹேலின் உடல் பாரிஸின் நான்டெர்ரேயில் தகனம் செய்யப்பட்ட நிலையில் பிரான்ஸில் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது.
இவ்வாறான நிலைமைகளால் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் தனது ஜேர்மனிக்கான அரசுமுறை பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
நஹேல் என்ற 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் நான்கு நாட்களாக பிரான்ஸில் பாரிய பிரச்சுனையை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், குறித்த சிறுவனை சுட்டுக்கொன்ற 38 வயதுடைய பொலிஸ் அதிகாரி அந்த சிறுவன் வேறு யார் மீதும் காரை மோதி விடக் கூடாது என்ற அச்சத்தில் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளார்.