கிழக்கில் நசீர் அஹமட்டுக்கு எதிராக களமிறங்கிய முஸ்லிம் அமைப்புக்கள்!

Date:

காத்தான்குடி கோட்ட கல்வி அலுவலகர் பதவி வெற்றிடத்துக்கு தகுதியுடைய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு எதிராகவும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ஆதரவாகவும் முஸ்லிம் அமைப்புக்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளன.

இந்த விடயத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமானால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அந்த அமைப்புக்கள் வரவேற்றுள்ளது.

முன்னதாக காத்தான்குடி கோட்ட கல்வி அலுவலகர் பதவி வெற்றிடம் ஏற்பட்டிருந்த நிலையில், அந்த பதவிக்கு இலங்கை கல்வி சேவை தரம் 3 (SLEAS GRADE 3) தகுதியுடையவர்கள் இல்லாமையால், தற்காலிக அதிகாரியாக இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 (SLPS GRADE 1) தகுதியை கொண்ட   M.M.அலாவுதீன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இலங்கை கல்வி சேவை தரம் 3 (SLEAS GRADE 3) படிப்பை நிறைவு செய்திருந்த A.G. மொஹமட் ஹக்கீமுக்கு  கோட்ட கல்வி அலுவலகர் நியமனம் தற்போதைய கல்வி  அமைச்சினால் அண்மையில் வழங்கப்பட்டது.

எனினும், அமைச்சர் நசீர் அஹமட்,தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த இலங்கை அதிபர் சேவையின் தரம் 1( SLPS GRADE 1) தகுதியுடையவர்.

ஆகவே, தொடர்ந்தும் இந்த பதவியில் இருக்க வேண்டும் எனவும் இலங்கை கல்வி சேவை தரம் 3 (SLEAS GRADE 3) நிறைவு செய்தவருக்கு கோட்ட கல்வி அலுவலகர்  நியமனம் வழங்க கூடாது எனவும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, கல்வி அமைச்சின் செயலாளரால் குறித்த விடயம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமைக்கமைய, ஆளுநர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுடையவருக்கு இந்நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த நிலையில், குறித்த நியமனம் காத்தான்குடி கல்வி  வலயத்திற்கு காத்திரமான கல்வி அபிவிருத்திக்கு வழிவகுத்துள்ளது என முஸ்லிம் அமைப்புக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...