குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: வைத்தியர் தீபால் பெரேரா!

Date:

குழந்தைகளுக்கான தடுப்பூசி பெற்றுக் கொடுக்க அஞ்ச வேண்டாம் என கொழும்பு லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் நிபுணத்துவ மருத்துவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசி வகைகளை ஏற்றுக் கொள்ளாமை பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக தடுப்பூசிகளை முறையாக பெற்றுக்கொள்ளாத 20 குழந்தைகளுக்கு அம்மை நோய் பரவியுள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அம்மை, போலியோ உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசி பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானது என தெரிவிக்கப்படுகிறது.

கர்ப்பிணி தாய் ஒருவருக்கு ஜெர்மன் அம்மை நோய் தொற்று பரவினால் பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முறையாக ஊசிகளை ஏற்றிக்கொள்ள தவறினால் 1940-50களில் போன்று போலியோ போன்ற நோய்களுக்கு தனியான நோயாளர் சிகிச்சை பிரிவுகளை உருவாக்க நேரிடும் என வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...