சுவீடனில் குர்ஆன் எரிப்புக்கு, இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம்

Date:

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படும் ஈத் அல் அதாவின் போது ஸ்வீடன் தலைநகரில் உள்ள மசூதிக்கு வெளியே இஸ்லாத்தின் புனித நூலான புனித குர்ஆன் எரிக்கப்பட்டதை இலங்கை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஸ்வீடனில் வசிக்கும் ஈராக்கியர் என்று கூறப்படும் சல்வான் மோமிகா, புதன்கிழமையன்று ஸ்டாக்ஹோமின் மத்திய மசூதிக்கு வெளியே இஸ்லாத்தின் புனித நூலின் நகலை எரித்தார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

“கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மற்றவர்களின் உரிமைகளை மதிக்கும் வகையில் இந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கும், மதத்தின் அடிப்படையில் பிளவுகள் மற்றும் வெறுப்புகளை உருவாக்குவதற்கு உரிமம் வழங்காமல் இருப்பதை உறுதிசெய்வதது பொறுப்பாகும்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் நலன் கருதி, சமூகங்களுக்கு இடையில் துருவமுனைப்புக்கு வழிவகுக்கும் மத சகிப்புத்தன்மை மற்றும் வெறுப்பு நடவடிக்கைகளைத் தடுக்க அனைத்து நாடுகளும் தனிநபர்களும் கடமைப்பட்டுள்ளனர்” என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தச் சம்பவத்துக்கு துருக்கி மற்றும் சவூதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் (NATO) சேர்வதற்காக ஸ்வீடன் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு துருக்கி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், ஸ்வீடன் தலைநகரிலேயே குர்ஆன் எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டின் மீதான துருக்கியின் கோபத்தை மேலும் கூட்டியுள்ளது.

வெறுக்கத்தக்க இதுபோன்ற தொடர்ச்சியான செயல்களை ஏற்றுக் கொள்ள இயலாது. இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் வெறுப்பையும், இனவாதத்தை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்பது தெளிவாகிறது’ என்று சவூதி அரேபியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, ஸ்வீடனில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, ஸ்வீடனுக்கான தமது நாட்டு தூதரை காலவரையின்றி திரும்பப் பெறுவதாக மொரோக்கோ அறிவித்துள்ளது. அத்துடன், தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் படியும் ஸ்வீடன் தூதருக்கு, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் மனு அனுப்பி உள்ளது.

“ஒரு மதத்தின் புனித நூல் எரிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இந்தச் சம்பவத்தை ஏற்றுக் கொள்ள இயலாது” எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவுத்துறை இணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஸ்வீடன் நிகழ்வுக்கு அமெரிக்காவின் கண்டனத்தை பதிவு செய்தார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...