சூடான் முழு அளவிலான உள்நாட்டுப் போரின் விளிம்பில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், அந்நாட்டு இராணுவத்திற்கும் துணை இராணுவ அமைப்பான இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (Rapid Support Forces) இடையில் சண்டை நடந்து வருகிறது.
இந்த சண்டையை நிறுத்துவதற்கான பல்வேறு இராஜதந்திர முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
சூடான் இராணுவத்தின் மிக முக்கியமான நட்பு நாடாகக் கருதப்படும் எகிப்தும், ஆர்.எஸ்.எஃப் அமைப்புடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகமோ இதுவரை ஒரு முக்கிய முடிவோ, சண்டையை முடிவுக்கு கொண்டுவரும் எந்த முயற்சியோ இதுவரை எடுக்கவில்லை.
இராணுவம் மற்றும் ஆர்.எஸ்.எஃப் உடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்ட மக்கள் கட்சிகள் உட்பட சூடான் நாட்டு பிரதிநிதிகள் இன்று எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.