தபால் திணைக்களத்துக்கு சொந்தமான வாகனங்களை காணவில்லை!

Date:

தபால் மா அதிபரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட 42 வாகனங்கள் குறித்து திணைக்களத்திடம் எந்த தகவலும் இல்லை என்று தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தபால் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, ​​இந்த வாகனங்கள் இல்லாதது தெரியவந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தபால்மா அதிபர் ருவன் சத்குமார கருத்து வெளியிடுகையில், ​​இந்த வாகனங்கள் 30-50 வருடங்களுக்கு இடைப்பட்டவையாகும்.

இந்த வாகனங்கள் பற்றிய தகவல்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவு பதிவேடுகளில் உள்ளன. ஆனால், தபால் திணைக்களத்தின் பொருட்கள் பட்டியலில் இவை இல்லை.

இதுகுறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இதுவரை எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை.

வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை என்றால் அவற்றை தரவு அமைப்பிலிருந்து நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...