தாக்குதலுக்கு உள்ளாகி நபர் ஒருவர் பலி!

Date:

பாணந்துறை திக்கல சந்தியில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளான நபர் பாணந்துறை தெற்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை தொட்டவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் உயிரிழந்தவருக்கும், சந்தேக நபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, இறந்தவர் சந்தேகநபரை முச்சக்கரவண்டியின்  கைப்பிடியால் தாக்கியுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் பதிலுக்கு தாக்கியதை அடுத்து படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்திய பாணந்துறை, வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...