நல்லதொரு மாற்றத்தை புது வருடம் ஏற்படுத்தட்டும்: முஸ்லிம் கலாசாரத் திணைக்கள பணிப்பாளரின் புதுவருட செய்தி

Date:

இலங்கை முஸ்லிம் சமூகம் தமக்குள் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களை மேற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதில் உறுதுணை புரியும் வருடமாக இந்தப் புதிய வருடம் அமைய வேண்டும் என முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன்  தெரிவித்துள்ளார்.

இன்று மலர்ந்திருக்கின்ற இஸ்லாமிய புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஹிஜ்ரி 1445 இஸ்லாமியப் புது வருடம் இன்று ஆரம்பிக்கின்றது. உலகத்துக்கு வழகாட்டியாக வந்த இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் புதியதொரு மாற்றத்துக்காக மக்காவில் இருந்து மதீனாவுக்கு மேற்கொண்ட ஹிஜ்ரத் எனும் புலம்பெயர்வை இன்றைய தினம் ஞாபகப்படுத்துகிறது.

இலங்கை மக்கள் நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கையொன்றை கடந்து கொண்டிருக்கிறார்கள்.

புதியதொரு மாற்றத்தை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் இந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வேண்டும், புதிய நம்பிக்கைகளும் புதிய உத்வேகமும் இந்தப் புதுவருடத்தில் மக்களிடேயே துளிர்க்க வேண்டும்.

ஒரு சமுதாயம் தன்னிடமுள்ளவற்றை மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ்தஆலாவும் அவர்களில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டான் என அல்லாஹுத்தலா கூறுகிறான்.

அந்த வகையில் இலங்கை முஸ்லிம் சமூகம் தமக்குள் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களை மேற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதில் உறுதுணை புரியும் வருடமாக இந்தப் புதிய வருடம் அமைய வேண்டும் என பணிப்பாளர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...