எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இலாபம் பெறும் நிலைமையை அடையாத இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து பேருந்து டிப்போக்களும் மூடப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இலங்கையில் உள்ள போக்குவரத்து சபைகளின் சகல பேருந்து டிப்போக்களும் இலாபமீட்டும் நிலைமைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
இலங்கையில் தற்போது 119 பேருந்து டிப்போக்கள் இருக்கின்றன. அவற்றில் 39 பேருந்து சாலைகள் மாத்திரமே இலாபத்தில் இயங்கி வருகின்றன.
38 பேருந்து டிப்போக்கள் நஷ்டமும் இலாபமும் இன்றி இயங்கி வருகின்றன.
இதனால், தற்பொழுது நஷ்டத்தில் இயங்கும் பேருந்து டிப்போக்கள் இலாபமீட்டும் நிலைமைக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.