நாட்டில் உள்ள தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவு கட்டணம் அதிகரிப்பு

Date:

நாட்டில் உள்ள தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுற்றுலா மற்றும் காணி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டிலுள்ள முக்கிய தாவரவியல் பூங்காவிற்குள் நுழைவதற்கான பெரியவர்கள் மற்றும் பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான அனுமதிக் கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

12 வயதுக்குட்பட்ட உள்ளூர் குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான அனுமதி கட்டணம் 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய வர்த்தமானியின்படி, அறுபது வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் தாவரவியல் பூங்காவிற்குள் நுழைய 50 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

வயதை சரிபார்க்க அவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

இதேவேளை, 12 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினருக்கான நுழைவுக் கட்டணம் 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட வெளிநாட்டு குழந்தைகளுக்கான அனுமதி கட்டணம் 1,500 ரூபாவாகவும், வெளிநாட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகைக் கட்டணமாக 2,000 ரூபாவில் அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கிடையில், தாவரவியல் பூங்கா எல்லைக்குள் வசிப்பவர்கள், உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக தோட்டத்திற்குள் நுழையும் அரசாங்க ஊழியர்கள், பணிப்பாளர் நாயகத்தால் இலவச அனுமதி பெற்ற நபர்கள் மற்றும் அரசாங்கத்தால் விருந்தளிக்கும் பார்வையாளர்கள் நுழைவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....