பள்ளிவாசல்களின் நடவடிக்கைகள் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திய தம்பபன்னி கடற்படை முகாம் குழுவினரின் நல்லிணக்க விஜயம்!

Date:

புத்தளம் தம்பபன்னி கடற்படை முகாம் தனது 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று, (24) ஆம் திகதி புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு நல்லிணக்க விஜயமொன்றை மேற்கொண்டது.

இவ்விஜயத்தில் மேற்படி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் லெப்டினல் கொமாண்டர் ஏ.டி.டி. ரணசிங்க தலைமையில் கலந்துகொண்டனர்.

தம்பன்னி கடற்படை முகாமின் கட்டளையிடும் அதிகாரி ஜி.பி சந்திரசிறியின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயத்தில் நடைபெற்ற ஒன்றுகூடலில் அரபுக்கல்லூரி மாணவரின் அழகிய குர்ஆன் பாராயணம் இடம்பெற்றது.

தொடர்ந்து வரவேற்புரையை ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஏ.எம். நிஜாம் ஆசிரியர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட சர்வமத அமைப்பின் உறுப்பினர் அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் முஜீப் உரையாற்றினார்.

அவர் தனது உரையில், 13 வருடங்களை பூர்த்தி செய்துள்ள தம்பபன்னி கடற்படை முகாம் நிர்வாகத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் ஆசிகளை வழங்கியதோடு கடற்படை மேற்கொள்கின்ற முக்கியமான பணிகள் பற்றியும் நினைவுபடுத்தி, முக்கிய தினங்களின் போது மத நிகழ்வுகளில் கலந்துகொள்வதன் மூலம் இந்நாட்டு மக்கள் மத வழிகாட்டல்களின் பால் எப்போதும் ஆர்வமாக இருக்கின்றனர் என்பதனையும் சுட்டிக்காட்டி மனிதவாழ்வில் மத வழிகாட்டல்களின் தேவைபற்றியும் எடுத்துரைத்தார்.

அதேவேளையில் இவ்வாறான சந்திப்புக்கள் இனங்களுடைக்கிடையிலான சகோதரத்துவத்தை சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு செய்வதையும் எடுத்துக்காட்டினார்.

இதன்போது உரையாற்றிய லெப்டினல் கொமாண்டர் எ.டி.டி ரணசிங்க அவர்கள்,

இச்சந்திப்புக்கு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு தனது நன்றியை தெரிவித்ததன் பின், பள்ளிவாசல்களுடைய நடவடிக்கைகள் பற்றி முதற்தடவையாக தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு கிடைத்ததை பற்றியும் முஸ்லிம்களுடைய பள்ளிவாசல்களை தரிசிப்பதற்கும் தெரிந்துகொள்வதற்கும் அங்குள்ள விடயங்கள் பற்றி அறிந்துகொள்வதற்குமான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பிட்டார்.


அண்மைக்காலம் வரை இஸ்லாத்தைப் பற்றியோ முஸ்லிம்களைப் பற்றியோ அறிந்துகொள்வதற்கான வாய்ப்புக்கள் சிங்கள மொழியில் மிக அரிதாக இருப்பதை சுட்டிக்கட்டிய அவர் இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி சிங்கள மக்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தெரிந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம்கள் செய்ய வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார்.

இந்நிகழ்வில் புத்தளம் மன்பஉஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரி பணிப்பாளர் அஷ்ஷெய்க் ரியாஸ் துஆ- பிரார்த்தனை செய்தார். பெரிய பள்ளிவாசல் சார்பில் நிர்வாகத் தலைவர் அல்ஹாஜ் பஸால் அவர்களும் கலந்துகொண்டார்.

 

நிகழ்வில் கலந்துகொண்ட கடற்படை முகாமினுடைய அதிகாரிகளுக்கு பள்ளிவாசலில் முக்கியமான இடங்கள் காண்பிக்கப்பட்டதுடன் சமய அனுஷ்டானங்கள் நடைபெறுகின்ற முறைமைகளும் விளக்கப்பட்டன.

மேலும், புத்தளம் பெரிய பள்ளிவாசல் வரலாற்று ரீதியாக எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்ற ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னருடைய சாமரம் உள்ளிட்ட முக்கிய உபகரணங்கள் காணிப்பிக்கபட்டதுடன் பள்ளிவாசலுடைய தொன்மையான வரலாற்றை தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பமும் இங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் லெப்டினல் கொமாண்டர் ரணசிங்க அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் அல்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியும் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...