பாரம்பரிய மிதிவண்டிகள் இல்லாமல், முச்சக்கர வண்டிகள் மூலம் தபால் சேவை: அமைச்சர் சாந்த பண்டார!

Date:

இலங்கையில் தபால் சேவையின் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, எதிர்வரும் காலங்களில் பாரம்பரிய மிதிவண்டிகள் இல்லாமல், முச்சக்கர வண்டிகள் மூலம் தபால்காரர், கடிதங்களை வழங்குவார்கள் என வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் (PMC) நடைபெற்ற ‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தபால் சேவையின் நவீனமயமாக்கலின் போது, நீண்டகாலமாக களத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த பாரம்பரிய மிதிவண்டிகளுக்கு பதிலாக 1000 முச்சக்கர வண்டிகள் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும்.

நாங்கள் உத்தியோகபூர்வ சீருடையையும் வழங்குவோம் என்று நம்புகிறோம். இதன் மூலம் நாட்டில் வலுவான தபால் சேவையை உருவாக்குவதே எமது இறுதி இலக்காகும்’ என தெரிவித்தார்.

தபால் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் செயற்பாடுகளை துரிதப்படுத்தும் வகையில் புதிய தபால் சட்டமொன்று இந்த வருடம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

10 பில்லியன் செலவில் பொது-தனியார் கூட்டுப் பங்காளியாக நவீனமயமாக்கல் செயல்முறை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தபால் திணைக்களம் எவ்வகையிலும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தபால் திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் 4000 மில்லியன் ரூபாவால் குறைக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...