சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி. சில்வா (DIG வடமேற்கு – வடக்கு) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்தினால் (PUTWA) புதுப்பிக்கப்பட்ட பொலிஸ் கண்காணிப்புக் கூடம், புத்தளம் பொலிஸ் நிலையத்திடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை புத்தளம் நகரில் நடைபெற்றது.
இக் கண்காணிப்புக் கூடத்தை பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அவர்களுடன் புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி HQI குலதுங்க திறந்து வைத்தனர்.
மேலும் இந்த திறப்பு விழாவில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் SSP கே.எஸ்.கே. ரூபசிங்க அவர்களும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டார்.
இதன்போது, வர்த்தக வணிக நடவடிக்கைகளுடன் சமூக ரீதியான நடவடிக்கைகளில் புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்தினால் வழங்கும் பங்களிப்பை பாராட்டிய நாலக டி சில்வா அவர்கள், புத்தளம் நகரத்தின் காவல் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அதன் அழகை பராமரிப்பதிலும் வர்த்தக சமூகத்தின் பங்களிப்பை வலியுறுத்தினார்.
இந்நிகழ்வுக்கு புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்க தலைவர் வை.எம் நிஸ்தாத், செயலாளர் இஹ்ஸாஸ் இல்யாஸ் உட்பட நிருவாக உறுப்பினர்களும் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.