புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் 1980ம் ஆண்டு க.பொ.த.சாதாரண தர மாணவர்களின் பழைய மாணவர் அமைப்பான “80 ஸ் சஹீரியன்ஸ் ஹீரோஸ்” அமைப்பின் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வொன்று கடந்த 30 ஆம் திகதி புத்தளம் நூர் நகரில் அமைந்துள்ள அமைப்பின் சிரேஷ்ட அங்கத்தவர் எம்.எஸ்.எம்.யாசிர் (வை.எம். நிறுவனர்) அவர்களது இல்லத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் இணை தலைவர்களான புத்தளம் அசன்குத்தூஸ் பாடசாலை அதிபர் எம்.மொஹிதீன் மற்றும் ஆர்.எம்.பவாஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் 30 அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
80’s சஹீரியன்ஸ் ஹீரோஸ் அமைப்பினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சமூக நல திட்டங்கள் குறிப்பாக கல்வி மேம்பாடுகள் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டு கல்வி குழு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டது.
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் அமைப்புகளில் மிக பழைமை வாய்ந்த அமைப்பாகவும், அனுபவஸ்தர்களை உள்ளடக்கிய அமைப்பாகவும் 80’s சஹீரியன்ஸ் ஹீரோஸ் விளங்குகிறது.
மேற்படி நிகழ்வின் இர போசனத்துக்கான அனுசரனையினை அங்கத்தவர் எம்.எஸ்.எம்.யாசிர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-எம்.யூ.எம்.சனூன்