பொக்குனுவிட்ட பிரதேசத்தில் போலி பொலிஸ் அதிகாரிகள் 10 பேர் கைது!

Date:

பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று நடித்து பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பொக்குனுவிட்ட பிரதேசத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மில்லனிய, கஹதுடுவ, அங்குருவத்தோட்ட, பாதுக்க, கொஸ்கம, இங்கிரிய, கிரிந்திவெல மற்றும் பண்டாரகம ஆகிய இடங்களில் சந்தேக நபர்கள் இந்த கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம், கடந்த 18ஆம் திகதி ஹொரண பொக்குனுவிட பிரதேசத்தில் 10 கிராம் ஹெரோயினுடன் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே ஏனையவர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...