மதுபான கடை திறப்பதற்கு எதிராக சம்மாந்துறை மல்வத்தை பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

Date:

சம்மாந்துறை மல்வத்தை பகுதியில் மதுபான கடை திறப்பதற்கு எதிராக மக்கள் இன்று புதன்கிழமை (05) கையெழுத்து வேட்டையும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுத்தனர்.
மல்வத்தை சந்தியில் மதுபானக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக  காலை முதல் மல்வத்தை சந்தியில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் வளத்தாப்பிட்டி மல்லிகைத்தீவு மல்வத்தை புதுநகர் கனபதிபுரம் 26ம்குளனி சடயந்தலாவ போன்ற பிரதேச மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மஜீட்புரம் பள்ளிவாசல்களிலும் நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுத்துள்ளது.

அதற்கமைய காலை பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் இணைந்த ஆர்ப்பாட்டமும் கையெழுத்து வேட்டையும் ஆரம்பித்துள்ளது.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...