மத்திய வங்கியின் வட்டி வீதம் குறைப்பு!

Date:

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (05) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனபடி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை 200 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 11 சதவீதம் மற்றும் 12 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டரீதியான கையிருப்பு வீதத்தை நிலவும் 4.00% அளவிலேயே பேணுவதற்கு நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

இதேவேளை, கடந்த மே மாதம் 31 ஆம் திகதியன்று, இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தனது கொள்கை வட்டி வீதங்களை பாரியளவில் குறைக்க தீர்மானித்திருந்தது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) முறையே 250 அடிப்படை புள்ளிகளால் 13.00 சதவீதம் மற்றும் 14.00 சதவீதம் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...