மனித உரிமை மீறல்களுக்காக ஐந்து நாடுகளுக்கு தடைவிதித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்

Date:

மனித உரிமை மீறல்களுக்காக ரஸ்யா, உக்ரைன் உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது தடைகள் விதிக்கப்பட்டடுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஆப்கானிஸ்தான், தென்சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ரஸ்யா, உக்ரைன் ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளை சேர்ந்த 18 பேருக்கும் 5 நிறுவனங்களுக்கும் எதிராகவும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் பாலியல் மற்றும் பாலியல் ரீதியிலான வன்முறைகளுக்கு எதிராக தடைவிதிக்கபட்ட அறுவரில் தலிபான்களின் கல்வி மற்றும் நீதி அமைச்சர்களும் ஆப்பாகானிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் நீதியரசரும் அடங்குகின்றனர்.

இதேவேளை, ரஸ்யாவை சேர்ந்த 12 பேருக்கு எதிராகவும் தடைவிதிக்கப்பட்டுள்ளன.

ரஸ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க கொத்து குண்டுகளை உக்ரைன் பயன்படுத்துவதை வெள்ளை மாளிகை அண்மையில் உறுதிசெய்திருந்தது.

ரஸ்ய படைகளால் பாதுகாக்கப்படுபவை மீதும் அவற்றின் நடவடிக்கைகள் மீதும் இந்த குண்டுகள் திறம்பட பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிருபை தெரிவித்துள்ளார்.

கொத்து குண்டு என்பது பலதரப்பட்ட குண்டுகளால் இணைந்துள்ளதுடன், அது வெடிக்கும் போது பாரிய பரப்புக்கு சேதங்களை ஏற்படுத்தி வெடிக்கும் வல்லமை கொண்டது.

இந்த குண்டுகளால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு நூற்றுக்கும் அதிகமான நாடுகள் அதனை தடைசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யுக்ரைனின் ஆயுத பலத்தை அதிகரிக்கும் நோக்கில் கொத்துக்குண்டுகளை அந்நாட்டுக்கு வழங்க அமெரிக்க இணங்கியிருந்தது.

இந்த குண்டுகளை ரஸ்ய வீரர்களின் செரிவை குறைக்கும் விதமாக பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் உறுதியளித்திருந்தது.

மேலும், கடந்த ஆண்டு உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ஆரம்பித்த போது பொது மக்கள் வாழும் பகுதிகள் உள்ளிட்டவற்றை ரஸ்யா கொத்து குண்டுகளை வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...