மாணவர்களால் தாக்கப்பட்ட ஆசிரியர்: ஒழுக்கமற்ற மாணவர்களால் ஒரு சமுதாயமே சீர் கெடும்!

Date:

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த தாக்குதலில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் கற்பிக்கும்  கோகுலவாசன் ஆசிரியர் மீது அதே கல்லூரியில் உயர் தரம் கற்கும் இரு மாணவர்கள், ஒரு மாணவரின் சகோதரர் மற்றும் மாணவனின் பெற்றோர் ஆகியோரால் பாடசாலை முடிவடைந்த நேரத்தில் சரமாரியாக தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஆசிரியரின் கண்ணில் காயம் ஏற்பட்டதில் அவர் தற்போது அக்கரைப்பற்றில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பாடசாலையின் ஒழுக்க கோவையை செயல்படுத்துவதில் எற்பட்ட முரண்பாட்டில் இத்தாக்குதல் நடை பெற்றதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி ஆசிரியர் மாணவர்களால் நேற்று (26) குறித்த ஆசிரியர் தாக்கப்பட்டதற்கு எதிராக பாடசாலைக்கு முன்னால் நீதி கோரி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஒழுக்கக் கோவை முரண்பாட்டில் ஆசிரியர்களைத் தாக்கும் கலாசாரம் புத்தளத்தில் ஆரம்பித்து தற்போது நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான மாணவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதுடன், இவர்களுக்கு ஆதரவாக செயற்படுவோரும் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்.

இந்த சம்பவத்தை வெறும் ஓரிரு மாணவர்களுடன் தொடர்பான நிகழ்வாக மட்டும் தொடர்பு படுத்திக் கடந்து விடாமல், குறித்த ஊரின் கல்விச் சமூகம், சிவில் அமைப்புக்கள், பள்ளிவாசல் சம்மேளனங்களும் கவனத்தில் கொண்டு இப்படியான மனநிலையை மாணவர் மத்தியில் இருந்து வேருடன் களைய வேண்டும்.
இல்லாவிட்டால், இந்த நிலை இன்னும் மோசமடையலாம்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...