முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் தொடர்பான அறிக்கையில் உலமா சபையுடன் முரண்பாடு காணும் முஸ்லிம் கவுன்சில்!

Date:

முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ள­ப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்­யத்துல் உலமா சபை தயா­ரித்து நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­வுக்கு கைய­ளிக்­க­வுள்ள அறிக்­கைக்கு அனு­ம­தி­ய­ளிக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் மறுத்­துள்­ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் உலமா சபையின் அறிக்­கையை முற்­றிலும் நிரா­க­ரிப்­ப­தா­கவும் குறிப்­பிட்ட அறிக்கை ஏற்­க­னவே ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­த­பாவின் தலை­மையில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உல­மா­சபை உட்­பட முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் ஒன்­று­கூடி மேற்­கொண்ட தீர்­மா­னத்­துக்கு முரண்­பட்­ட­தாக அமைந்­துள்­ள­தா­கவும் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்த அறிக்கை ஏற்­க­னவே ஜனா­தி­ப­திக்கும் நீதி­ய­மைச்­ச­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் செய­லாளர் எ.டி.எம். ரிஸ்வி கையொப்­ப­மிட்டு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

“ நீதி­ய­மைச்­ச­ருக்கு கைய­ளிப்­ப­தற்­காக தயா­ரிக்­கப்­பட்­டுள்ள சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்­கையின் பிர­தி­யொன்­றினை அனுப்பி வைத்­துள்­ளீர்கள்.

அதில் கடந்த 11 ஆம் திகதி உலமா சபை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளு­ட­னான கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மானம் எனவும் குறிப்­பிட்­டுள்­ளீர்கள்.

கூட்­டத்தில் கலந்து கொண்­ட­வர்கள் வருகை ஆவ­ணத்தில் கையொப்­ப­மிட்­டமை தீர்­மா­னங்­க­ளுக்கு இணங்­கி­ய­மை­யாக கருத முடி­யாது. எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தங்களது சிபாரிசுகளுக்கு கையொப்பமிட்டதாக உள்வாங்காதீர்கள்.

தங்களது முரண்பட்ட நிலைப்பாடு குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: விடிவெள்ளி

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...