APIIT சட்டக் கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையேயான “விவாதப் போட்டி 2023” இல், முஸ்லீம் மகளிர் கல்லூரி விவாதக் குழு இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பாடசாலைகளின் கடுமையான போட்டிக்கு மத்தியில், முஸ்லீம் மகளிர் கல்லூரியின் திறமையான பெண்கள் இறுதிப் போட்டியாளர்களாக வெளிப்பட்டு, அவர்களின் அசாதாரணமான விவாதத் திறன்களையும், அறிவையும் வெளிப்படுத்தினர்.
இறுதிப்போட்டியில் அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டது அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்குச் சான்றாகும், இது முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு பெருமையையும், மரியாதையையும் கொண்டு சேர்த்துள்ளது.