ரிஜ்வே OPD வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!

Date:

கொழும்பு ரிஜ்வே சீமாட்டி வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் (OPD) இன்று காலை 08.00 மணிமுதல் 24 மணித்தியால அடையாள பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்க தலைவர் மற்றும் ஊடகபேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

சிறுவர் வைத்தியசாலையான ரிஜ்வேயில் இதுவரை காலம் பணி பகஸ்கரிப்பு இடம்பெற்றிருக்கவில்லை. ஏதேனும் ஒரு காரணத்துக்காக பணி பகிஸ்கரிப்பு நடைபெறுகின்ற போதிலும் சிறுவர் வைத்தியசாலையில் ஒரு போதும் பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவில்லை.

இதுவரைகாலமும் நாம் பயன்படுத்தாத மருந்துகளை பாவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் நாம் இது தொடர்பில் கதைத்திருந்தோம் ஊடக அறிக்கைகளை வெளியிட்டிருந்தோம். வழங்கப்பட்ட தீர்வினை நம்பினோம். ஆனாலும் இதுவரை காலமும் அதற்கான தீர்வு எட்டப்படவில்லை.

எனவே பொய்யான வாக்குறுதிகளுக்கு அமைய எம்மால் தொடர்ந்து பயணிக்க முடியாது.

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் எட்டாம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் தனகேற்ற வகையில் செயற்பட்டு வருகின்றார்.

நோயாளர்களை அவர் தொடர்ந்து அசௌகரிய நிலைக்கு உள்ளாக்குகிறார். எவ்வாறாயினும் சீமாட்டி ரிஜ்வே அவரச பிரிவு தொடர்ந்து இயங்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆனாலும், குறித்த பணிபகிஸ்ரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...