கடந்த பல வருடங்களாக லிபியாவில் ஆட்சித் தலைவராக இருந்த முகம்மர் கடாபி உடைய மரணத்தைத் தொடர்ந்து லிபியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரங்களின் காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
இத்தகைய ஓர் சூழ்நிலையில் , சர்வதேச நிவாரண அமைப்புக்கள் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை செய்து வருகின்றார்கள். இந்த வரிசையில் லண்டனை மையமாகக் கொண்டு செயல்படுகின்ற ஒரு சமூக சேவை அமைப்பு நேற்று லிபியாவின் தலைநகரான திரிபோலியில் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற குழந்தைகளுக்கான இலவச சத்திர சிகிச்சை முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இம் மனிதாபிமான நிகழ்வில் லண்டனில் செயல்படுகின்ற, பணி புரிகின்ற பல நாடுகளையும் சேர்ந்த 10 வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், சிறுவர் நோய் நல நிபுணர்கள் கலந்து கொண்டு இவ் இலவச இருதய நோய் நிவாரண சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
இவ் வைத்திய குழுவில் இலங்கையைச் சேர்ந்த பிரபல சிறுவர் நோய் நிபுணரான Dr. ரயீஸ் முஸ்தபா அவர்களும் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: Dr. ரயீஸ் முஸ்தபா (திரிபோலி நகரில் இருந்து)
Video: 👇 click photo