விடுமுறை குறித்து அதிபர்களுக்கு விசேட அதிகாரம்: கல்வி இராஜாங்க அமைச்சர்!

Date:

சீரற்ற காலநிலையால் தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அவ்வவ் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

குரல்பதிவு ஒன்றை அனுப்பியுள்ள அவர், சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயகத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியதுடன், நுவரெலிய கல்வி வலயத்திலும் சில பாடசாலைகளுக்கு இந்நிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டின் எப்பகுதியிலாவது சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளை நடத்த முடியாத நிலைமை இருந்தால், அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதா? இல்லையா? ஏன்பதை தீர்மானிக்க முடியும்.

இதுதொடர்பாக அவர்கள் கோட்ட கல்வி மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுடன் கதைத்து தீர்மானம் எடுக்கலாம் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் குறிப்பிட்டுள்ளார்

Popular

More like this
Related

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்...

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள்...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க...